சென்னை: மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், நோய்களால் பாதிக்கப்பட்ட 45 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் மார்ச் 1ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி அனுமதி வழங்கியது.
அதனடிப்படையில், பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் உள்பட பலர் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர்.
அந்த வரிசையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று(மார்ச் 4) சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒன்றில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இதுவரை நாடு முழுவதும் ஒரு கோடியே 56 லட்சத்து 20 ஆயிரத்து 749 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திமுகவுடன் கூட்டணி ஏன்? - திருமாவளவன் விளக்கம்