ETV Bharat / state

கோயம்பேடு மெட்ரோ நிலையத்தை பாஷ்யம் வாங்கினாரா? - வைகோ காட்டம் - Vaiko strongly condemned Metro Station renamed

சென்னை: எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கோயம்பேடு மெட்ரோ நிலையத்திற்கு பாஷ்யம் மெட்ரோ நிலையம் எனப் பெயர் மாற்றம்செய்த விவகாரத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Vaiko strongly condemned on Koyambedu  Metro Station to renamed  as baashyam Metro Station

author img

By

Published : Feb 4, 2021, 1:48 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோயம்பேட்டில் அமைந்துள்ள சென்னை மாநகர மெட்ரோவின் தலைமை அலுவலகத்தில் உள்ள பாலத்திற்கு, கடந்த சில நாள்களாக வண்ணம் அடிக்கும் பணி நடைபெற்றது. இந்நிலையில், திடீரென நேற்று, ‘பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ’ என, புதிய பெயரைச் சூட்டி எழுதி இருக்கின்றார்கள். இதுகுறித்து, எந்தவிதமான முன்அறிவிப்பையும், மாநகர மெட்ரோ வெளியிடவில்லை. இந்தப் பெயர் மாற்றத்தை, வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

யார் அந்த பாஷ்யம், கோயம்பேடு மெட்ரோ நிலையத்தை விலைக்கு வாங்கி இருக்கின்றாரா, அது நிறுவனமா அல்லது தனி ஒருவரா அல்லது பராமரிப்புப் பணிகளுக்கான ஒப்பந்தம் பெற்று இருக்கின்றாரா, அவர் தமிழ்நாட்டுக்குச் செய்த தியாகம் என்ன, எதற்காக இந்தப் பெயர் மாற்றம்? என்பதற்கு, சென்னை மாநகர மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும்.

இந்தப் பெயர் மாற்றம், தமிழ்நாடு அரசுக்குத் தெரியுமா, இதற்கு இசைவு அளித்து இருக்கின்றார்களா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

நாடு விடுதலை அடைந்து 72 ஆண்டுகளாக, விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் எத்தனையோ நிறுவனங்கள் ஒப்பந்தங்களைப் பெற்றுச் செய்துவருகின்றன. இதுவரை எந்த நிறுவனத்தின் பெயரையும் எழுதியது இல்லை. ஆனால், கேரளத்தில் திருவனந்தபுரம் விமான நிலையத்தின் பராமரிப்புப் பணிகளைப் பெற்ற அதானி குழுமம், ‘அதானி ஏர்போர்ட்’ எனப் பெயர் மாற்றம்செய்ததை, கேரள மாநில அரசு கடுமையாகக் கண்டித்து இருக்கின்றது.

உங்கள் வீட்டுக்கு வண்ணம் பூச வருகின்ற ஒருவர், வீட்டு முகப்பில், தனது பெயரை எழுதினால், ஒப்புக்கொள்வீர்களா? அதுபோல, விமான மற்றும் ரயில் நிலையங்களைப் பராமரிக்கின்ற நிறுவனங்கள், அவற்றைச் சொந்தம் கொண்டாட முடியாது.

சென்னை விமான நிலையத்தின் முன்பு இருந்த அண்ணா, காமராசர் பெயர்ப்பலகைகளை நீக்கினார்கள். இன்றுவரை திரும்ப வைக்கவில்லை. ஒருவேளை, சென்னைக்கும் அதானி பெயரைச் சூட்டத் திட்டம் வைத்திருக்கின்றார்களா? என்பதற்கு, மத்திய மாநில அரசுகள் விளக்கம் அளிக்க வேண்டும்.

கோயம்பேடு மெட்ரோ நிலையத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்டு இருக்கின்ற பாஷ்யம் என்ற பெயரை, உடனே நீக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.