இதுகுறித்து வைகோ, நடிகர் ரஜினிகாந்த் இன்னும் கலையுலகில் ஒளிவிட்டு பிரகாசித்துக் கொண்டிருக்கிறார். எனக்கும் அவர் நண்பர்தான். ஆனால் வட மாநிலங்களில் கூட இளைஞர்கள் பெரியாரை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டு இருக்கும் நிலையில், ரஜினிகாந்த் ஒரு செய்தியைச் சொல்லும்போது அதுகுறித்து திராவிடர் கழகம் மறுப்பு தெரிவிக்கிறது. திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் மறுப்பு தெரிவிக்கிறார். அவர்கள் ஆணித்தரமான ஆதாரங்கள் இல்லாமல் மறுப்புத் தெரிவிக்க மாட்டார்கள். எந்த தேதி, எந்தெந்த ஏடுகளில் என்னென்ன செய்திகள் வந்தன என்பன உள்ளிட்ட அனைத்தும் அவர்கள் வைத்திருக்கிறார்கள். அது போன்றதொரு சம்பவம் ஒன்று நடக்கவில்லை என்றும் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
நடிகர் ரஜினிகாந்த் வைத்திருந்த பத்திரிக்கையின் நிருபர் தவறான தகவலை அளித்திருக்கலாம். அந்த தகவல் தமக்கு தவறான தகவல்களாக தெரிவதாக கூறிவிட்டு, அப்படி சொன்னதற்காக வருந்துகிறேன் என்று கூறியிருந்தால் அவரது மதிப்பு இன்னும் கூடியிருக்கும். ஆனால் அதற்கு மாறாக அவர் பதிலளித்து சென்றுள்ளார் என்றார்.
தொடர்ந்து பேசிய வைகோ, ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு ஒருபக்கம் வாசலை திறந்து வைத்து பெட்ரோலிய ரசாயன ஆய்வு மண்டலத்துக்கு நிலம் ஒதுக்கியது அதிமுக அரசு என குற்றஞ்சாட்டினர்.
இதற்கு ஆளுங்கட்சி உள்பட அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து இத்திட்டத்தை எதிர்க்க வேண்டும் என வலியுறுத்தினார். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுக்காவிட்டால் வருங்கால சந்ததி நாசத்தை சந்திக்கும், நம்மை அவர்கள் மன்னிக்க மாட்டார்கள் என எச்சரித்தார்.