ETV Bharat / state

'அகவிலைப்படி, ஈட்டிய விடுப்பு குறித்த அரசாணைகளைத் திரும்பப் பெறுக' - அகவிலைப்படி பி.எப் ஈட்டிய விடுப்பு அரசாணைகள்

அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை நிறுத்திவைத்தல், அகவிலைப்படி உயர்வை ரத்துசெய்தல், பி.எஃப். வட்டிக் குறைப்பு ஆகியவை குறித்த அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவற்றைத் திரும்பப் பெறுமாறு வைகோ வலியுறுத்தியுள்ளார்.

வைகோ
வைகோ
author img

By

Published : Apr 28, 2020, 3:36 PM IST

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி, பி.எஃப். (வருங்கால வைப்புநிதி), ஈட்டிய விடுப்பு ஆகியவற்றிற்கு பாதகமாக அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது குறித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ”கரோனா காரணமாக ஏற்பட்டுவரும் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்க, ஜனவரி மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவித்த நான்கு விழுக்காடு அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.

மேலும் 48 லட்சத்து 34 ஆயிரம் மத்திய அரசு ஊழியர்கள், 65 லட்சத்து 26 ஆயிரம் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வையும் 2021ஆம் ஆண்டு ஜூலைவரை நிறுத்திவைப்பதாக மத்திய அரசு கடந்த 23ஆம் தேதி அறிவித்தது.

இந்நடவடிக்கை லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களைப் பாதிக்கும் என்பதால், அகவிலைப்படி உயர்வை எப்போதும் போல அதிகரிக்க வேண்டும் என்று கோரிவருகின்றனர்.

மத்திய அரசின் அடியொற்றி, தமிழ்நாட்டில் ஆட்சிபுரியும் எடப்பாடி பழனிசாமி அரசும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அனைத்துத் துறை பணியாளர்கள் என சுமார் 12 லட்சம் பேரை தற்போது அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

அரசு ஊழியர்கள் ஆண்டுக்கு 15 நாள்கள் என இரண்டு ஆண்டுகளுக்கு 30 நாள்கள் ஈட்டிய விடுப்பை சமர்ப்பித்து, விடுப்பு ஊதியம் பெற்றுவருகின்றனர். இந்த ஈட்டிய விடுப்பை இரு ஆண்டுகள் எடுக்காதவர்கள், அதைத் தங்களது ஒரு மாத அடிப்படை ஊதியமாக (ஆண்டுக்கு 15 நாள் ஊதியம்) பெற்றுக்கொள்ளலாம்.

தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்ட அரசாணை மூலம், ஈட்டிய விடுப்பு ஊதியம் தொடர்பான விண்ணப்பங்களும், நிலுவைத் தொகை தொடர்பான கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட மாட்டாது. ஏற்கனவே ஈட்டிய விடுப்புக்கான ஊதியம் அளித்திட ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தால் அவை ரத்துசெய்யப்படும். விண்ணப்பதாரரின் விடுப்பு கணக்கில் ஈட்டிய விடுப்பு நாள்களாகச் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அகவிலைப்படி உயர்வு, 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம்வரை நிறுத்திவைக்கப்படும் எனவும், வருங்கால வைப்புநிதிக்கான வட்டி விகிதம் 7.9 விழுக்காட்டிலிருந்து, 7.1 விழுக்காடு என்று குறைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கரோனா பேரிடரை எதிர்கொள்ள மருத்துவத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை, உள்ளாட்சித் துறை உள்ளிட்ட அனைத்துத் துறை பணியாளர்களும் அரசு நிர்வாகத்திற்கு முழு அளவில் ஒத்துழைப்பு நல்கி, அர்ப்பணிப்புடன் செயலாற்றிவருகின்றனர்.

இப்படிப்பட்ட நெருக்கடியான காலகட்டத்தில், ஏதேச்சதிகாரமாக ஈட்டிய விடுப்பை நிறுத்திவைத்தல், அகவிலைப்படி உயர்வை ரத்துசெய்தல், வருங்கால வைப்புநிதி வட்டிக் குறைப்பு ஆகியவை குறித்த அரசாணைகளை பிறப்பித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல. தமிழ்நாடு அரசு இத்தகைய அரசாணைகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: 'அரசுக்கு அச்சாணியாக இருப்பவர்கள் தலையிலேயே நிதி நெருக்கடியை சுமத்துவதா?'

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.