ETV Bharat / state

வைகோ ஆவணப்பட விழா... அதிமுக, பாஜகவுக்கு அழைப்பு இல்லை... துரை வைகோ பேட்டி

வைகோ ஆவணப்படவிழாவில் அதிமுக, பாஜகவிற்கு அழைப்பு இல்லை என மதிமுகவின் தலைமை நிலையச்செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

வைகோ ஆவணப்பட விழா...அதிமுக, பாஜகவுக்கு அழைப்பு இல்லை...துரை வைகோ பேட்டி

author img

By

Published : Aug 24, 2022, 6:07 PM IST

சென்னை: தேமுதிகவின் நிறுவனத்தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்து, மதிமுகவின் தலைமை நிலையச்செயலாளர் துரை வைகோ வாழ்த்து தெரிவித்தார். மேலும் வைகோவின் அரசியல் பயணம் குறித்து நடைபெறும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை நேரில் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, "விஜயகாந்த் நல்ல மனிதர். அவர் பூரண உடல் நலம் பெற்று விரைவில் மக்கள் பணி ஆற்ற வேண்டும். இந்தச் சந்திப்பு என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட சந்திப்பு ஆகும். வைகோவை பற்றி மக்கள் அறிய வேண்டும் என்பதற்காக வைகோ அரசியல் பயணம் குறித்த 75 நிமிட ஆவணப்படம் வெளியிடப்பட உள்ளது.

இந்த ஆவணப்படம் என்பது எந்த ஒரு தனிப்பட்ட நபரையும், அரசியல் கட்சிகளையும் தாக்குவதற்காக இல்லை. இந்த நிகழ்ச்சிக்கு அதிமுக, பாஜகவைத் தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளையும் அழைக்க உள்ளோம். எங்களை பொறுத்தவரை அதிமுக, பாஜக என்பது வேறு இல்லை. நாங்கள் ஒன்றாகத்தான் பார்க்கிறோம். வைகோவின் அரசியல் பயணம் குறித்த ஆவணப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார்" எனக் கூறினார்.

வைகோ ஆவணப்பட விழா... அதிமுக, பாஜகவுக்கு அழைப்பு இல்லை... துரை வைகோ பேட்டி

இதையும் படிங்க: விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளது... பிரேமலதா விஜயகாந்த்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.