இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அணுமின் உலையில் அணுக் கழிவுகளைச் சரியாகக் கையாளாமலும், உரியப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாமலும் அணுமின் உற்பத்தி நடக்கிறது. மேலும், அணுக் கழிவுகளைப் பாதுகாப்பாக அகற்றாமல் கடலில் கொட்டப்படுகிறது. இதனால், மிகப்பெரிய அளவில் சுற்றுச்சூழல் பாதிப்பும், கதிர் வீச்சு அபாயமும் ஏற்படும்.
இந்த அணுக் கழிவுகள் என்பது உறங்கிக் கொண்டிருக்கும் அணுகுண்டு போன்றது, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இதனை முழுமையாகச் செயலிழக்கச் செய்யும் தொழில்நுட்பம் இல்லாமல் திணறுகின்றன. இந்நிலையில், கூடங்குள வளாகத்துக்குள்ளேயே அணுக் கழிவுகளைச் சேமித்து வைக்கும் கட்டமைப்புகளை உருவாக்க மத்திய அரசு தீர்மானித்திருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.
தமிழ்நாட்டில் கூடங்குளத்தில் கழிவுகளைக் கொட்டி சேமிப்பது என்பது கற்பனை செய்ய முடியாத பேரழிவை ஏற்படுத்தும். எனவே, அணுமின் உற்பத்தி நிலையங்களை நிரந்தரமாக மூட வேண்டும். புதிய அணு உலைகளையும் நிறுவக்கூடாது" என்று அவர் குறிப்பிட்டார்.