ETV Bharat / state

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் தேர்வு முடிவுகளில் குளறுபடிகள்: வைகோ கண்டனம் - Vaiko condemns Anna University for the flaws in Engineering Exam Results

”கடந்த காலங்களில் தேர்வில் ஒருமுறை கூட தோல்வி அடையாத மாணவர்கள் பலர், மூன்று, நான்கு பாடங்களில் தோல்வி அடைந்துள்ளனர். இதனால் பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பெற்றோர்களும் அதிர்ச்சிக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்”

வைகோ
வைகோ
author img

By

Published : Apr 16, 2021, 3:46 PM IST

அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், தேர்வு முடிவுகளை பல்கலைக்கழகம் மறு ஆய்வு செய்து, முடிவுகளை வெளியிட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

வைகோ அறிக்கை

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்ணா பல்கலைக்கழகம், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வுகளை, கடந்த மார்ச் மாதம் இணைய வழியில் (ஆன்லைன்) நடத்தியது. நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வுகளை எழுதினார்கள்.

40 விழுக்காடு மட்டுமே தேர்ச்சி

கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முடிவுகள் வெளியாகின. இந்நிலையில், இத்தேர்வுகளில் 40 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர் என்றும், முறைகேடுகளில் ஈடுபட்டதால் இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த காலங்களில் தேர்வில் ஒருமுறை கூட தோல்வி அடையாத மாணவர்கள் பலர், மூன்று, நான்கு பாடங்களில் தோல்வி அடைந்துள்ளனர்.

இணைய வழியில் தேர்வு எழுதும்போது மாணவர்கள் தனி அறையில் உட்கார்ந்து எழுத வேண்டும்; கணிணியை நேராகப் பார்த்து எழுத வேண்டும். தலையை அசைக்கக் கூடாது. அக்கம் பக்கத்தில் வேறு எவரும் இருக்கக் கூடாது என பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தார்கள்.

கரோனாவோடு மேலும் ஒரு சுமை

கிராமப்புற மாணவர்கள், வீடுகளில் தனியாக உட்கார்ந்து எழுதுவதற்கு அறைகள் கிடையாது. சற்றுத் தொலைவில் பெற்றோர் உட்கார்ந்து இருந்தாலும்கூட, அதையும் முறைகேடு என கணிணிகள் பதிவு செய்து இருக்கின்றன. கரோனா பேரிடரால் பல குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நிலையில், கல்லூரிக் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக சில மாணவர்களின் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்து இருப்பதாகவும் தெரிகிறது.

மன உளைச்சலில் மாணவர்கள்

இத்தகைய குளறுபடிகளால், பல்லாயிரக்கணக்கான மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் அதிர்ச்சிக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகி உள்ளனர். நன்கு படித்து அதிக மதிப்பெண்கள் பெற்று வந்த கடலூரைச் சேர்ந்த சந்தியா என்ற பொறியியல் கல்லூரி மாணவி தேர்வில் தோல்வி அடைந்ததால், மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

முதன்முறை செயற்கை நுண்ணறிவு உபயோகம்

முதன்முறையாக, செயற்கை நுண்ணறிவு முறையில் (Artificial Intelligence evaluation system) நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வுகளில், பல குளறுபடிகளும், முறைகேடுகளும் நிகழ்ந்துள்ளன. ஒன்றரை லட்சம் மாணவர்கள் காப்பி அடித்து முறைகேடு செய்ததாகக் கூறுவதும், தேர்வு எழுதாத மாணவர்கள் சிலர் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிப்புகள் வெளியாகி இருப்பது, அண்ணா பல்கலைக்கழகத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறது.

எனவே, தேர்வு முடிவுகளை உடடினயாக மறு ஆய்வு செய்து, கல்லூரிக் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக நிறுத்தி வைத்துள்ள மாணவர்களின் தேர்வு முடிவுகளையும் கால தாமதமின்றி வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வாக்கு எந்திரங்கள் இருக்கும் மையங்களுக்கு லேப்டாப்புடன் நுழைந்த நபர்கள் - பதறும் திமுக

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.