சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகை செல்வன் கூறியதாவது, "நாடாளுமன்ற தேர்தலில் நாற்பது தொகுதிகளிலும் அதிமுக மெகா கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.அதிமுக கூட்டணிக்குதான் எங்கள் வாக்கு என்று தேர்தல் பரப்புரை மேற்கொள்ளும்போது மக்கள் தெரிவித்து வருகின்றனர். திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நடந்த சோதனையில் ரூ.15 கோடி பணம் கத்தை கத்தையாக கைப்பற்றப்பட்டுள்ளது.
இதற்கு துரைமுருகன் என்ன பதில் சொல்லப் போகிறார். தேர்தலுக்கு பயந்து சோதனை நடப்பதாக மாயை தோற்றத்தை திமுக ஏற்படுத்துகிறது.இந்த சோதனைக்கும், அரசியலுக்கும் எந்த சம்பந்தமில்லை.இதற்கு திமுக தான் பொறுப்பேற்க வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்
.