எல். முருகன் ஒன்றிய இணையமைச்சராக பதவியேற்க இருக்கிறார் என்று ஒன்றிய அரசு வெளியிட்ட அறிவிப்பில் கொங்கு நாடு, தமிழ்நாடு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விவகாரம் பெரும் விவாதத்தை கிளப்பியது.
இச்சூழலில் நடிகர் வடிவேலு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து கரோனா நிவாரண நிதியாக 5 லட்சம் ரூபாய் வழங்கினார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் கொங்கு நாடு விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு வடிவேலு, “ராம்நாடுனு ஒன்னு இருக்கு. ஒரத்தநாடுனு ஒன்னு இருக்கு. இன்னும் பல நாடு இருக்கு. பிரிச்சோம்னா அவ்வளவுதான். இதையெல்லாம் பிரிக்க முடியுமா. நல்லாருக்க தமிழ்நாட எதுக்கு பிரிச்சிக்கிட்டு.
நான் அரசியல் பேசல வேண்டாம். இதெல்லாம் கேட்கும்போது தலை சுத்துது” என்று அவர் பாணியில் கலாய்த்துவிட்டு சென்றார்.