ETV Bharat / state

வடபழனி நிதி நிறுவன கொள்ளை.. 4.5 லட்சம் ரூபாய் பறிமுதல்

வடபழனி நிதி நிறுவன கொள்ளை வழக்கில் மொத்தம் 4.5 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வடபழனி நிதி நிறுவன கொள்ளை.. 4.5 லட்சம் ரூபாய் பறிமுதல்
வடபழனி நிதி நிறுவன கொள்ளை.. 4.5 லட்சம் ரூபாய் பறிமுதல்
author img

By

Published : Aug 19, 2022, 12:54 PM IST

சென்னை வடபழனி மன்னார் முதலி முதல் தெருவில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனம் ஒன்றில் கடந்த 16 ஆம் தேதி புகுந்த 7 பேர் கொண்ட கும்பல், நிறுவன ஊழியர்களை கத்தி முனையில் மிரட்டி லாக்கரில் இருந்த 30 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துவிட்டு இருசக்கர வாகனங்களில் தப்பிச் சென்றனர்.

அப்போது பைனான்ஸ் நிறுவன உரிமையாளர்களில் ஒருவரான சரவணன் மற்றும் சில ஊழியர்கள், கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் துரத்தி கொள்ளையர்களில் ஒருவனான விருகம்பாக்கத்தை சேர்ந்த சையது ரியாஸ் (22) என்பவரை பிடித்து வடபழனி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக தனியார் நிதி நிறுவன உரிமையாளர்களுள் ஒருவரான சரவணன் அளித்த புகாரின் அடிப்படையில், சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிய காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இவ்வாறு ரியாஸிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இஸ்மாயில், பரத், கிஷோர், ஜானி, தமிழ் செல்வன் மற்றும் கண்ணன் (எ) மொட்டை ஆகியோர் சையது ரியாஸுடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து கொள்ளையர்களைப் பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை காவல்துறையினர் ஆந்திரா, பெங்களூர் மற்றும் திருச்சி போன்ற பல்வேறு பகுதிகளில் தேடி வந்தனர்.

இந்நிலையில் கொள்ளையர்களில் ஒருவரான தமிழ் செல்வனின் நண்பரான ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த கிஷோர் வடபழனி காவல்துறையினரிடம், தமிழ் செல்வன் தன்னை வந்து சந்தித்து 2 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துச் சென்றதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து உடனடியாக கிஷோர் வீட்டிற்குச் சென்ற தனிப்படை காவல்துறையினர் கிஷோரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது தமிழ் செல்வன் தனது தாயிடம் கொடுக்கச் செல்லி கிஷோரிடம் 2 லட்சம் ரூபாய் பணத்தை அளித்துள்ளார் என்பது தெரிய வந்தது. பின்னர் அவரிடம் இருந்த 2 லட்சம் ரூபாய் பணத்தையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக இவ்வழக்கில் தொடர்புடைய கிஷோர் கரண் மற்றும் தமிழ் செல்வன் ஆகியோர் நேற்று திருவள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞருடன் சரணடைந்தனர்.

இந்நிலையில் மீதமுள்ள கொள்ளையர்களை தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 19) வேலூர் வானியம்பாடியில் முக்கிய நபரான கண்ணன் (எ) மொட்டை, தினேஷ் மற்றும் ஜானி (எ) சந்தோஷ் ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 2.5 லட்சம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். இதன் மூலம் இதுவரை கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் 4.5 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கைது செய்யப்பட்ட மூன்று பேரை சென்னை அழைத்து வரும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

அதேநேரம் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படும் 30 லட்சம் ரூபாயில் சுமார் 7 லட்சம் ரூபாய் மட்டுமே கணக்கில் காட்டப்படும் பணம் எனவும், மீதமுள்ளது ஹவாலா பணம் எனவும் தகவல் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளை...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.