தென்சென்னை மக்களவைத் தொகுதியில் அமமுக சார்பில் இசக்கி சுப்பையா போட்டியிடுகிறார். அப்பகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில், சைதாப்பேட்டை பகுதியில் இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மக்கள் வரவேற்பு அனைத்து பகுதிகளிலும் எங்களுக்கு நன்றாக இருக்கிறது. ஓசூரில் அமமுக வேட்பாளர் புகழேந்தியை தாக்கும் நோக்கில் அவரது வாகனத்தை தாக்கி சேதப்படுத்தியுள்ளார்கள். இதன் மூலம் எங்களை பார்த்து பிற கட்சிகள் பயப்படுகிறது என்பது தெரிகிறது. இவர்களின் இந்த நடவடிக்கைகள் எங்கள் வெற்றியை இன்னும் உறுதிப்படுத்தியுள்ளது. தாக்குதல் நடத்தியவர்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறோம். இதனை நாங்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்" என்றார்.
'எங்களை பார்த்து பிற கட்சிகள் பயப்படுகின்றன' - அமமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா - பிறகட்சிகள் பயப்படுகின்றது
சென்னை: ஓசூரில் அமமுக வேட்பாளர் வாகனத்தை தாக்கிய எதிரிகளின் நடவடிக்கையால் எங்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வடசென்னை அமமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா தெரிவித்தார்.

தென்சென்னை மக்களவைத் தொகுதியில் அமமுக சார்பில் இசக்கி சுப்பையா போட்டியிடுகிறார். அப்பகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில், சைதாப்பேட்டை பகுதியில் இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மக்கள் வரவேற்பு அனைத்து பகுதிகளிலும் எங்களுக்கு நன்றாக இருக்கிறது. ஓசூரில் அமமுக வேட்பாளர் புகழேந்தியை தாக்கும் நோக்கில் அவரது வாகனத்தை தாக்கி சேதப்படுத்தியுள்ளார்கள். இதன் மூலம் எங்களை பார்த்து பிற கட்சிகள் பயப்படுகிறது என்பது தெரிகிறது. இவர்களின் இந்த நடவடிக்கைகள் எங்கள் வெற்றியை இன்னும் உறுதிப்படுத்தியுள்ளது. தாக்குதல் நடத்தியவர்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறோம். இதனை நாங்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்" என்றார்.
Body:TN_CHE_04_14_AMMK CANDIDATE BYTE_VIS_7204894
Conclusion: