ETV Bharat / state

'தடுப்பூசி சப்ளையில் மக்களின் உயிரோடு விபரீத விளையாட்டு' - DMK leader mk stalin

கரோனா தொற்று தமிழ்நாட்டில் வேகமாகப் பரவிவரும் நிலையில், ‘அனைவருக்கும் தடுப்பூசி’ என்ற கொள்கை முடிவை எடுத்து தமிழ்நாட்டிற்குத் தேவையான தடுப்பூசிகளை மத்திய பாஜக அரசு தாமதமின்றி போர்க்கால அடிப்படையில் அனுப்பிவைக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

stalin
ஸ்டாலின்
author img

By

Published : Apr 15, 2021, 8:24 AM IST

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் காட்டுத்தீ போல் அதிகரித்துவரும் சூழலில் அனைவருக்கும் தடுப்பூசி எனக் கொள்கை முடிவு எடுக்க வேண்டிய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி என்ற முடிவினை எடுத்திருப்பது வேதனை அளிக்கிறது.

உயிர்க்காக்கும் தடுப்பூசி போடுவதைத் திருவிழா என்று பெயர் சூட்டி தனது அரசின் நிர்வாக அலட்சியத்தைத் திசை திருப்புவதிலேயே மத்திய அரசு அக்கறை காட்டுகிறாரே தவிர, அனைவருக்கும் தடுப்பூசி வழங்கிட வேண்டும் என்று முடிவெடுக்க இதுவரை முன்வரவில்லை.

தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள மக்கள் முன்வரவில்லை என்றால் - அதற்கு மத்திய அரசும், அதிமுக அரசுமே முழுப் பொறுப்பேற்க வேண்டும். ஏனென்றால் தடுப்பூசியின் பாதுகாப்புப் பற்றி உரிய வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தத் தவறியது இரு அரசுகளும்தான்.

'தடுப்பூசியால் எவ்வித ஆபத்தும் இல்லை' என்ற விழிப்புணர்வை உரிய காலத்தில் ஏற்படுத்தாமல் - தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் எண்ணிக்கையை வைத்தே தடுப்பூசி விநியோகம் செய்யப்படும் என்று மத்திய பாஜக அரசு பிடிவாதம் காட்டுவது மிகவும் தவறான நடைமுறை.

இது மாதிரி - தமிழ்நாட்டிற்குத் தடுப்பூசி விநியோகம் செய்வதில் அறிவியல் பூர்வமற்ற கட்டுப்பாடுகளை விதிப்பது மக்களின் உயிரோடு நடத்தும் விபரீத விளையாட்டாகும்.

தமிழ்நாட்டில் இதுவரை முதல் டோஸ் 35.67 லட்சம், இரண்டாவது டோஸ் 4.53 லட்சம் என்ற அளவில் மொத்தம் 40.21 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசின் சுகாதாரத் துறை இணையதளத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கரோனா தடுப்புக்கு இது எப்படி போதுமானதாக இருக்கும்?

கரோனா தொற்று வேகமாகப் பரவி, மருத்துவமனைகள் எல்லாம் நிரம்பி வழியும் சூழ்நிலை உருவாகியுள்ள இந்த நேரத்தில், அனைவருக்கும் தடுப்பூசி என்ற கொள்கை முடிவினை எடுத்து தமிழ்நாட்டிற்குத் தேவையான தடுப்பூசிகளைத் தாமதமின்றிப் போர்க்கால அடிப்படையில் அனுப்பிவைக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.