ETV Bharat / state

புனேவிலிருந்து சென்னை வந்த கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள்!

புனேவிலிருந்து 3 லட்சத்து 14 ஆயிரத்து 110 கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் இன்று (ஜுன் 20) சென்னை விமான நிலையம் வந்தடைந்தன.

புனேவிலிருந்து சென்னை வந்த கோவிஷீல்டு
புனேவிலிருந்து சென்னை வந்த கோவிஷீல்டு
author img

By

Published : Jun 20, 2021, 11:04 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசியும், சீரம் நிறுவன தயாரிப்பில் உருவாக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழ்நாட்டில் பல பகுதிகளில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், தமிழ்நாட்டிற்கு கூடுதலாக தடுப்பூசி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது. இந்நிலையில், புனேவிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 27 பார்சல்களில் சுமார் 3 லட்சத்து 14 ஆயிரத்து 110 கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தன. இதனை சுகாதாரத் துறை அலுவலர்கள் பெற்றுக் கொண்டு சென்னை விமான நிலையத்திலிருந்து குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை பெரிய மேட்டிலுள்ள மருந்து கிடங்குக்கு கொண்டு சென்றனர்.

இதையும் படிங்க: வெளிநாடு செல்வோருக்கான கரோனா இரண்டாம் தவணை தடுப்பூசி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.