சென்னை: தமிழ்நாடு பார் கவுன்சில் சார்பில் வழக்கறிஞர்கள், கிளார்க்குகள், அவர்களின் குடும்பத்தினர், நீதிமன்ற பணியாளர்களுக்கான கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாமை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி இன்று தொடங்கிவைத்தார்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நீதிபதிகள் என். கிருபாகரன், எம்.எம். சுந்தரேஷ், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், துணைத் தலைவர் கார்த்திகேயன், இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் பிரபாகரன், அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா, நீதிக் கரங்கள் அமைப்பின் நிர்வாகி பி. வில்சன், தமிழ்நாடு சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
![விழாவில் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்ரமணியம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12286353_n.jpg)
விழாவில் பேசிய நீதிபதி என். கிருபாகரன், கரோனாவால் வருமானம் இழந்துள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் என்றும், தொற்றால் உயிரிழந்த வழக்கறிஞர்களின் குடும்பங்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: 'மணமக்களுக்கு மண் அடுப்பு; அரசுக்குப் பாடம் எடுப்பு' - நண்பர்கள் தந்த பரிசும் பாடமும் அடடே!