ஆயுதப்படை மருத்துவ சேவை அமைப்பில் (armed forces medical services) உள்ள Short Service Commission Medical Officer பணிக்கு 420 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.
காலிப்பணியிடங்கள்:
Short Service Commission Medical Officer - 420
Male – 378
Female – 42
கல்வி தகுதி:
அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற மருத்துவ பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் MBBS, Post Graduate பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பதாரர்கள் தங்களது பட்டத்தை State Medical Council / MCI / NMC-ல் பதிவு செய்த நபராகவும் இருக்க வேண்டும்.
வயது விவரம்:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகபட்சம் 30 (MBBS) வயது முதல் 35 (PG Degree) வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
சம்பள விவரம்:
Short Service Commission Medical Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் பெறுவார்கள்.
தேர்வு முறை: Online Interview மூலம் இப்பணிக்கு தகுதி உள்ள நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.200 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் www.amcsscentry.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை Online மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். 18.09.2022 என்ற இறுதி நாளுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழகத்தில் Professional Assistant வேலைவாய்ப்பு