ETV Bharat / state

தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாசாரம்: அரசை கேள்விக் கணைகளால் துளைத்த உயர் நீதிமன்றம்! - சட்டவிரோதமாக ஆயுதங்கள் விற்பனை

சென்னை: தமிழ்நாட்டில் தற்போது துப்பாக்கி கலாசாரம் மெதுவாகப் பரவி வருகிறது. இது மாநிலத்துக்கும், நாட்டுக்கும் நல்லதல்ல; எனவே,  துப்பாக்கி கலாசாரத்தைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Using gun culture spread in all over tamilnadu, MHC distres

author img

By

Published : Aug 3, 2020, 5:01 PM IST

உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, கொள்ளையடித்த வழக்கில் பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று(ஆகஸ்ட் 3) விசாரணைக்கு வந்தது.

அப்போது, பேசிய நீதிபதி கிருபாகரன், 'தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாசாரம் பரவி வருகிறது. பிகார், ஜார்கண்ட்டில் இருந்து நாட்டு துப்பாக்கிகள் தமிழ்நாட்டிற்கு வருகிறது. இவை குண்டர்கள், கிரிமினல்கள், அரசியல்வாதிகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இவர்களில் பலர் துப்பாக்கிக்கான உரிமத்தினைக் கொண்டுள்ளனர். அரசு உரிய நடவடிக்கைகள் எடுத்து துப்பாக்கி கலாசாரத்தைத் தடுக்க வேண்டும்.

உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளை வைத்து, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் பிடியிலிருந்து விட முடியாது' என்றார்.

மேலும், நீதிபதிகள் இந்த வழக்கில் , தமிழ்நாடு உள்துறைச் செயலர், காவல் துறைத் தலைமை இயக்குநர் மற்றும் சென்னை காவல் ஆணையரை எதிர் மனுதாரராக சேர்த்தனர்.

உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி பயன்படுத்தி, கொள்ளையடித்ததாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? வட மாநிலங்களில் இருந்து உரிமம் இல்லாத துப்பாக்கிகள் எளிதாக கிடைக்கிறதா?

சட்டவிரோதமாக ஆயுதங்கள் விற்றதாக எத்தனை பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்? வெளிநாடுகளில் இருந்தும் ஆயுதங்கள் விற்பனை செய்யப்படுகிறதா? தமிழ்நாட்டில் எத்தனை பேருக்கு துப்பாக்கி வைத்திருக்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது?

உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததாக எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? ரவுடி கும்பல் துப்பாக்கிகள் பெற்று கொலை, கொள்ளை, நில அபகரிப்பு குற்றத்தில் ஈடுபடுகின்றனரா?

நக்சல்களும் சமூக விரோதிகளும், ஆயுதங்களை வைத்து சட்டம்–ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்துகின்றனரா? என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி, இக்கேள்விகளுக்கு, இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.