சென்னையிலிருந்து இலங்கையின் கொழும்பு நகருக்கு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று (ஜூன் 18) சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாரானது. அந்த விமானப் பயணிகளிடம் சுங்கத்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திருச்சியை சோ்ந்த லட்சுமி (35),கனகவல்லி (29), திண்டுக்கல்லை சேர்ந்த மாரியம்மாள் (39) ஆகிய 3 பெண் பயணிகளின் உடைமைகளில் மொத்தம் ரூபாய் 35 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணம் சிக்கியது.
இதையடுத்து மூன்று பெண் பயணிகளையும் சுங்க அதிகாரிகள் கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் பணம் யாருடையது? யாருக்கு இலங்கைக்கு கடத்தினா்? இலங்கை வழியாக எந்த நாட்டுக்கு எடுத்துச் சென்றனர்? எனும் கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: "அக்னிபாத் திட்டம்" இளைஞர்களுக்கான வரப்பிரசாதம் - ஆளுநர் ஆர்.என்.ரவி