ETV Bharat / state

மருத்துவ மாணவர் சேர்க்கை சட்ட முன்வடிவு விவகாரம்; ஆளுநர் பதவி விலக வலியுறுத்தல்!

author img

By

Published : Jan 26, 2022, 11:48 AM IST

மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான சட்ட முன் வடிவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு ஆளுநர் அனுப்ப வேண்டும் அல்லது அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்து அரசியல் கட்சிகளும் முன் வைக்க வேண்டும் என பொது பள்ளிக்கான மாநில மேடை வலியுறுத்தியுள்ளது.

மருத்துவ மாணவர் சேர்க்கை சட்ட முன்வடிவு விவகாரம்; ஆளுநர் பதவி விலக வலியுறுத்தல்!
மருத்துவ மாணவர் சேர்க்கை சட்ட முன்வடிவு விவகாரம்; ஆளுநர் பதவி விலக வலியுறுத்தல்!

சென்னை: பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “தமிழ்நாடு ஆளுநரின் குடியரசு தின செய்தி, மக்களாட்சி, கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. சாதியெனும் பாகுபாடு கொண்ட சமூகக் கட்டமைப்பைத் தகர்த்திட வேண்டிய அவசியத்தைப் பற்றி ஆளுநரின் அறிக்கை பேசவில்லை.

’நீட்’ நியாயப்படுத்த முயற்சி

தனியார் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, அதிகக் கட்டணம் வசூலிக்கும் மெட்ரிக் பள்ளிகள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள் பெரும்பகுதி சமூகப் படிநிலையில் உயர் வகுப்பைச் சார்ந்தவர்கள். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் பெரும்பகுதியினர் சமூகத்திலும், கல்வியிலும் பின்தங்கிய வகுப்பைச் சார்ந்தவர்கள்.

சமூக, கல்வி பின்புலமே கற்றல் வாய்ப்புகளை தீர்மானிக்கிறது. அரசின் பொறுப்பிலும், செலவிலும் பொதுப் பள்ளி முறைமையை உருவாக்குவதின் மூலமே இத்தகைய பாகுபாட்டைக் களைய முடியும். ஆனால் ஆளுநர் இது குறித்து எதுவுமே பேசவில்லை.

"நீட்" மூலம் மாணவர் சேர்க்கைக்கு முன்பாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு கிடையாது. "நீட்" நடைமுறைக்கு வந்த பிறகுதான் 7.5% உள் ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது. உள் ஒதுக்கீடு இல்லாத காலத்தில் நடந்த மாணவர் சேர்க்கையை, உள் ஒதுக்கீடு நடைமுறையில் இருக்கும் போது நடக்கும் மாணவர் சேர்க்கையுடன் ஒப்பிட்டு "நீட்" நடைமுறையை நியாயப்படுத்த முயல்வது முற்றிலும் நேர்மையற்ற அணுகுமுறை.

அனுப்பப்படாத சட்ட முன்வடிவு

மருத்துவ மாணவர் சேர்க்கை குறித்த தமிழ்நாடு சட்டப் பேரவை நிறைவேற்றிய சட்ட முன்வடிவைக் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பாமல் தானே நான்கு மாதத்திற்கு மேல் வைத்திருப்பதை நியாயப்படுத்த குடியரசு தின செய்தியை பயன்படுத்தியிருக்கிறார் ஆளுநர்.

பிரதமர் நரேந்திர மோடி மக்கள் விரும்புவதை செய்வதில்லை, மக்களுக்கு எது நல்லதோ அதை செய்கிறார் என்று சொல்லி ஜனநாயகத்திற்கான புது விளக்கத்தை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தந்துள்ளார். அதற்கேற்ப ஆளுநர் குடியரசு தின செய்தி அமைந்துள்ளது. மக்களாட்சியில் மக்களே இறுதி இறையாண்மை கொண்டவர்கள்.

"இந்திய மக்களாகிய நாம்..." என்று தொடங்கும் அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை இதை தெளிவுபட விளக்குகிறது. மக்களின் வாக்குச் சீட்டு மூலமே தேர்ந்தெடுக்கப்படும் அரசு இறையாண்மையைப் பெறுகிறது. தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகள் தரும் தேர்தல் அறிக்கை மக்களுக்குத் தரும் வாக்குறுதி.

பதவி விலக வலியுறுத்தல்

வாக்குறுதியில் இடம் பெற்றுள்ள கொள்கைகள், திட்டங்களை ஏற்றுக் கொண்டுதான் மக்கள் தங்கள் வாக்கை அளிக்கின்றனர்.‌ தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்குத் தேர்தலில் தரப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு உள்ளது. மக்களாட்சி மாண்புகளுக்கு மதிப்பளிக்காமல் மாநிலச் சட்டப் பேரவையைச் சிறுமைப்படுத்துகிறார் ஆளுநர்.

பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில் மாண்டேகு - செம்ஸ்போர்டு 1919ல் பரிந்துரைத்த இரட்டையாட்சி முறையை எதிர்த்துப் பலரின் உயிர்தியாகத்தால் இந்தியா விடுதலை பெற்றது. மீண்டும் காலனிய காலத்திற்குத் தமிழ்நாட்டைப் பின்னுக்கு இழுக்கப் பார்க்கிறார் ஆளுநர். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மாண்புகளை ஏற்று தமிழ்நாடு ஆளுநர் செயல்பட வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும்.

கூட்டாட்சித் தத்துவத்தையும், மக்களாட்சி மாண்புகளையும் அடிப்படைக் கோட்பாடாகக் கொண்ட இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கியுள்ள இந்திய குடியரசைக் காக்கின்ற கடமை நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. இந்திய மக்களே 'இறுதி இறையாண்மை கொண்டவர்கள்' என்ற கோட்பாடுடைய இந்தியக் குடியரசைக் காத்திட மக்கள் ஒன்றிணைய வேண்டும்.

மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான சட்ட முன் வடிவைக் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு ஆளுநர் அனுப்ப வேண்டும் அல்லது அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்து அரசியல் கட்சிகளும் முன் வைக்க வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Republic Day: 15,000 அடி உயரத்தில் தேசிய கொடியை பறக்கவிட்ட எல்லை வீரர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.