ETV Bharat / state

போட்டியின்றி தேர்வானவர்கள் எத்தனை பேர்? - நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் போட்டியின்றி 218 வேட்பாளர்கள் தேர்வாகியுள்ளனர்.

போட்டியின்றி தேர்வானவர்கள் எத்தனை பேர்?
போட்டியின்றி தேர்வானவர்கள் எத்தனை பேர்?
author img

By

Published : Feb 22, 2022, 10:56 AM IST

சென்னை:தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் வார்டுகளுக்கு கடந்த பிப்ரவரி 19 அன்று தேர்தல் நடந்து முடிந்தது. மேலும் 7 வாக்கு சாவடிகளில் நேற்று (பிப்ரவரி21) மறு வாக்கு பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் பல வார்டுகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். தமிழ்நாட்டில் 12,602 இடங்களுக்கு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 218 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மொத்தம் 21 மாநகராட்சிகளில் 4 வார்டுகளில் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். 138 நகராட்சிகளின் 3,843 வார்டுகளில் 18 பேர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். 490 பேரூராட்சிகளின் 7,609 வார்டுகளில் 196 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள வார்டுகளுக்கான எண்ணிக்கை தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

இதையும் படிங்க:தேர்தல் 2022: நகராட்சி வார்டுகள் வெற்றி நிலவரம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.