சென்னை: மறைந்த நடிகர் எம்.என்.நம்பியாருக்கு சுகுமாரன், மோகன் என்ற மகன்களும், சினேக லதா என்ற மகளும் உள்ளனர். நம்பியாரின் சொத்துகள் பாகப்பிரிவினை செய்யப்பட்ட பின் சுகுமாரன் காலமாகிவிட்ட நிலையில், சுகுமாரனின் மகனும், நம்பியாரின் பேரனுமான சித்தார்த் சுகுமாரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.
தனது தாத்தா நம்பியாருக்கு சொந்தமாக சென்னை கோபாலபுரம் 9-வது தெருவில் உள்ள வீட்டில் இருக்கும் அசையும் பொருட்களான மரச்சாமான்கள், ஓவியங்கள், ஃபிரேம் செய்யப்பட்ட புகைப்படங்கள், படங்கள், ஆல்பங்கள் மற்றும் பூஜை அறையில் பொருத்தப்பட்டுள்ள பொருட்கள், படங்கள் மற்றும் சபரிமலை சுவாமி அய்யப்பன் உள்ளிட்ட தெய்வங்களின் ஓவியங்கள், தாத்தா எம்.என்.நம்பியார் பெற்ற கோப்பைகள் மற்றும் விருதுகள், தந்தை எம்.என்.சுகுமாரன் நம்பியாரின் பொருட்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்கும்படி கோரிக்கை வைத்திருந்தார்.
தனது அத்தை சினேக லதாவுடன் ஒரே குடும்பமாக இருந்தபோது, அந்த பொருட்களை அனைவரும் வைத்திருந்ததாகவும், அந்த பொருட்களை தனக்கு தருவதாக ஒப்புக்கொண்ட தனது அத்தை சினேக லதா, தான் தனியாக வீடு வாங்கி குடியேறிய பிறகு, தற்போது தர மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, அந்த பொருட்களை தன்னிடம் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, வழக்கில் குறிப்பிடப்பட்ட விருதுகள் மற்றும் பொருட்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வழக்கறிஞர் ஆணையராக என்.பாலமுரளி கிருஷ்ணன் என்பவரை நியமித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து சினேக லதா நம்பியார் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்திருந்தார். அதன் மனுவில் தந்தை நம்பியார் பயன்படுத்திய பொருட்கள் தனக்கு தான் சொந்தம் என்றும், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
மேல்முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வு, தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்ததுடன், நம்பியாரின் வீட்டில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க புதிதாக ஒரு வழக்கறிஞர் ஆணையரை நியமிப்பதாக தெரிவித்துள்ளனர்.
எம்.என்.நம்பியாரின் கலெக்ஷன்களை ஆய்வு செய்ய ஆணையர் நியமனம்: மீண்டும் உறுதிசெய்த ஹைகோர்ட்! - inspect mn nambiyar collections
மறைந்த நடிகர் எம்.என்.நம்பியாரின் புகைப்படங்கள், விருதுகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து வழக்கறிஞர் ஆணையரை நியமித்து பிறப்பித்த உத்தரவை மீண்டும் உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.