யூடிஎஸ் மொபைல் செயலி மூலமாக சென்னை புறநகர் மின்சார ரயில்களில் முன்பதிவு செய்யாத டிக்கெட்களை பயணிகள் பெறலாம் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. நாளை முதல் (பிப். 11) இந்த சேவை அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் மாதாந்திர பயணச்சீட்டு, நடைமேடை டிக்கெட் ஆகியவற்றை இந்த செயலி மூலம் வாங்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த சேவை யூடிஎஸ் மொபைல் செயலியில் தொடங்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: திருநெல்வேலியில் தொடங்கியது முன்பதிவு - ரயிலில் பயணிக்க மக்கள் ஆர்வம்