சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாடு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவர் ஏ.பி. கருப்பையா சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். கோயம்பேடு சந்தையை திறக்க வேண்டும், இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் இடம்பெற்றுள்ளன.
இந்த சந்திப்பின்போது, தலைமைச் செயலர் க. சண்முகம், வேளாண்மைத் துறை முதன்மைச் செயலர் ககன்தீப் சிங் பேடி, அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், மற்றொரு நிகழ்வில் பழனிசாமியை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா சங்க நிர்வாகிகளுடன் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
இந்நிகழ்வின் போது தலைமைச் செயலர் க. சண்முகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் ராஜேஷ் லக்கானி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் செயலர் டாக்டர் டி. கார்த்திகேயன், காவல்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: கத்தியைக் காட்டிய சாமியார் - அடித்து துவைத்த ரஷ்ய பெண்!