ETV Bharat / state

டெல்லி புறப்பட்டார் அமித்ஷா! - eps meets amitsha

சென்னை: இரண்டு நாள் சென்னை பயணத்தை முடித்துக்கொண்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (நவம்பர் 22) டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டார் அமித்ஷா

author img

By

Published : Nov 22, 2020, 11:08 AM IST

Updated : Nov 22, 2020, 11:32 AM IST

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக, நேற்று (நவம்பர் 21) பிற்பகல் சென்னை வந்தார். விமான நிலையத்தில் இருந்து தனியார் விடுதிக்கு செல்லும் வழியெங்கும் அவருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று மாலை நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படவுள்ள உள்கட்டமைப்புத் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டார் அமித்ஷா
அதனைத் தொடர்ந்து மீண்டும் தனியார் விடுதிக்கு வந்த அமித்ஷாவை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின்போது மூன்று முக்கிய கோரிக்கைகளை மனுக்களாக முதலமைச்சர் அமித்ஷாவிடம் வழங்கினார். தொடர்ந்து, பாஜக நிர்வாகிகள், ஆடிட்டர் குருமூர்த்தி, உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுடன் அமித்ஷா, அதிகாலை மூன்று மணி வரை ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, இன்று காலை தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன், ஆஸ்.எஸ்.எஸ் அமைப்பினர், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோரும் அவரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், தனது சென்னை பயணத்தை முடித்துக்கொண்டு மத்திய அமைச்சர் அமித்ஷா டெல்லி புறப்பட்டார். சென்னை விமான நிலையத்திலிருந்து அவரை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வழியனுப்பி வைத்தார்.

இதையும் படிங்க: அமித்ஷா விடம் முதலமைச்சர் வைத்த மூன்று கோரிக்கைகள்!

Last Updated : Nov 22, 2020, 11:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.