இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ்நாட்டு வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னூரிமை அளிக்க தமிழ்நாடு அரசு சட்டம் இயற்ற முன்வர வேண்டும்.
இது ஒன்றும் புதிதான சட்டமல்ல இந்தியாவில் நிறைய மாநிலங்களில் இது மாதிரியன சட்டம் அமுலில்
உள்ளது.
குறிப்பாக இச்சட்டம் முதலில் ஒடிசாவில் 2010ல் கொண்டுவரப்பட்டது. இதேபோல 2016ஆம் ஆண்டு ஜார்கண்டில் இச்சட்டத்தை அமுல்படுத்தினார்கள்.
தற்போது கூட ஆந்திராவில் இதுபோன்ற சட்டம் உள்ளது. ஆகவே பிறமாநிலங்களில் இருப்பதை போலவே தமிழ்நாட்டிலும் இச்சட்டம் இயற்ற வேண்டுமென கோரிக்கை வைக்கிறேன், இவ்வாறு அவர் கூறினார்.