ETV Bharat / state

'ஒன்பது ஆண்டுகால மோடி ஆட்சியில் படுகுழியில் பொருளாதாரம்' - ராஜீவ் கவுடா பேட்டி - demonization News in Tamil

கரோனா பெருந்தொற்று காரணமாக 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பரிதாபமாக இறந்தபோதிலும் அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க மோடி அரசு மறுப்பது ஏன் என்று காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் ராஜீவ் கவுடா கேள்வி எழுப்பி உள்ளார்.

Under Modi rule, economy in abyss- congress spokesperson rajiv gowda blames
ஒன்பது ஆண்டுகால மோடி ஆட்சியில் படுகுழியில் பொருளாதாரம் - ராஜீவ் கவுடா பேட்டி
author img

By

Published : May 28, 2023, 10:20 PM IST

சென்னை: ஒன்பது ஆண்டுகால மோடி ஆட்சியில் மத்திய அரசு தோல்வியை சந்தித்து பொருளாதாரத்தை படுகுழியில் தள்ளியிருக்கிறது; 2024-ம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி மத்தியில் ஆட்சி அமைக்கும் என காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் ராஜீவ் கவுடா தெரிவித்துள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் அகில இந்திய காங்கிரஸ் ஆராய்ச்சி துறை தலைவரும், தேசிய செய்தி தொடர்பாளர் ஆன ராஜீவ் கவுடா இன்று (மே 28) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) தலைமையிலான பா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இந்த 9 ஆண்டுகளில், பல்வேறு துறைகளில் மத்திய அரசு தோல்வியை சந்தித்து பொருளாதாரத்தை படுகுழியில் தள்ளியிருக்கிறது. இந்தியாவில் விலைவாசி உயர்வும் வேலையின்மையும் ராக்கெட் வேகத்தில் அதிகரித்து இருக்கிறது.

பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் மாறி இருக்கிறார்கள். கடந்த 2014ஆம் ஆண்டு ரூ.410 ஆக இருந்த ஒரு எரிவாயு சிலிண்டர் விலை, தற்போது ரூ.1,113 ஆக (169 சதவீதம்) உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 அமெரிக்க டாலரில் இருந்து 70 டாலராக குறைந்த போதிலும் பிரதமர் மோடி பொறுப்பேற்ற 2014ஆம் ஆண்டிலிருந்து ஏறிய வண்ணம் மட்டுமே உள்ளது.

மோதானி மெகா முறைகேடும்; பண மதிப்பிழப்பும்: 'மோடி கொண்டு வந்த பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி.‌ (GST) போன்ற நடவடிக்கைகளால் சிறு தொழில்கள் ஒழிந்தன. விவசாயி சட்டங்களை திரும்பப்பெறும் போது விவசாயிகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் ஏன் மதிக்கப்படவில்லை.‌ கடந்த 9 ஆண்டுகளில் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பு ஆகவில்லை. கோடிக்கணக்கான பாலிசிதாரர்கள் மற்றும் டெபாசிட் தாரர்களின் சேமிப்பை பணயம் வைத்து எல்.ஐ.சி. (LIC) மற்றும் எஸ்.பி.ஐ (SBI) போன்ற தேசிய சொத்துக்கள் எப்படி அதானி போன்ற ஆபத்தான நிறுவனங்களுக்கு முதலீடுகள் மற்றும் கடன்கள் வழங்கப்பட்டது என்பதை மோதானி மெகா முறைகேடு அம்பலப்படுத்தியது. 2020-ல் சீனாவுக்கு நீங்கள் நற்சான்றிதழ் கொடுத்த பிறகும் அவர்கள் இந்திய பகுதியை ஆக்கிரமித்து கொண்டிருப்பது ஏன் சீனாவுடன் 18 சந்திப்புகள் நடத்தப்பட்டுள்ளன.

23% பட்டியலினத்தவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: உங்கள் அடக்குமுறை அரசாங்கம், ஏன் சமூக நீதியின் அடித்தளத்தை அழிக்கிறது பெண்கள், பட்டியலினத்தவர்கள், சிறுபான்மையினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து ஏன் மௌனமாக இருக்கிறீர்கள். சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை ஏன் புறக்கணிக்கிறீர்கள். மக்கள் தொகை பெருக்கத்தை கணக்கிட்ட பிறகும் 2014ஆம் ஆண்டிலிருந்து பட்டியலினத்தவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் 23 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2021இல் 4.2 லட்சம் ஆக உயர்ந்திருக்கிறது. கடந்த 9 ஆண்டுகளில் நமது அரசியலமைப்பு, பலவீனம் அடைந்திருக்கிறது. அருணாச்சல் பிரதேசம், கோவா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை பண பலத்தை பயன்படுத்தி கவிழ்த்தது ஏன்?' என்று கேள்வியெழுப்பினார்.

'கரோனா காரணமாக 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பரிதாபமாக இறந்தபோதிலும் அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க மோடி அரசாங்கம் மறுப்பது ஏன்? லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வீடு திரும்பும் நிலைக்கு தள்ளப்பட்ட போது, பொதுமுடக்கத்தை திடீரென ஏன் அறிவித்தீர்கள்? அவர்களுக்கு எந்த உதவியும் வழங்கவில்லையே ஏன்? இரண்டாவது கரோனா அலையின் போது உங்கள் அரசு, அதனை எதிர்கொள்ள தயாராக இல்லாததால் அதிக மரணங்கள் நிகழ்ந்தன. போதுமான ஆக்சிஜன் கையிருப்பு, மருந்துகள் மற்றும் மருத்துவமனைகளில் போதிய அளவிற்கு படுக்கைகள் இல்லாததால் உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி இந்தியாவில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 47 லட்சமாக இருந்தது. ஆனால், நீங்களோ ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை' என தெரிவித்தாக குற்றம்சாட்டினார்.

மத்திய அமைச்சரவையில் ஏன் இஸ்லாமியர்களுக்கு இடமில்லை?: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் ஒரு இஸ்லாமியர் கூட இல்லை என்று கேள்வியெழுப்பிய அவர், ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருவதாக சாடினார். வருகிற 2024ஆம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி மத்தியில் ஆட்சி அமைக்கும்" என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Rahul Gandhi : நாடாளுமன்ற திறப்பை தனக்கான பட்டாபிஷேகமாக கருதுகிறார்.. ராகுல் காந்தி விமர்சனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.