இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழுவின் செயலாளர் ராஜ்நிஷ் ஜெயின் கூறுகையில், "நடப்பு கல்வியாண்டில் சேர்ந்த மாணாக்கர்களும், ஏற்கனவே மத்திய அரசின் உயர்கல்விக்கான உதவித் தொகையை பெற்று வரும் மாணாக்கர்களும் பதிவு செய்ய வேண்டும். முதுகலை பயிலும் மாணவிகளுக்கான இந்திரா காந்தி கல்வித்தொகை, பல்கலைக்கழக அளவில் முதன்மை மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, வடகிழக்கு மாநிலங்களுக்கான இஷான் உதய் சிறப்பு உதவித்தொகை, முதுகலை படிக்கும் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை உள்ளிட்ட 4 கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணாக்கர்கள் ஜனவரி 20ஆம் தேதிவரை கல்வித்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும். கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்துள்ள மாணாக்கர்களின் விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பத்தை சரிபார்ப்பதுடன் புதிதான விண்ணப்பங்களை பிப்ரவரி 5ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
மேலும், மாணாக்கர்கள் தேசிய கல்வித்தொகைக்காக http//scholarships.gov.in இணையதள பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க...கேரளாவின் இளம் கிராம பஞ்சாயத்து தலைவராக பதவியேற்றார் ரேஷ்மா!