தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க ஸ்டாலின் இன்று (மே 7) பொறுப்பேற்றார். சென்னை கிண்டி ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மு.க.ஸ்டாலினுக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செய்து வைத்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள மு.க ஸ்டாலினுக்கு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் பல பிரபலங்களும் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகரும் சேப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின்,முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - கலைஞர் ஆகியோர் ஸ்டாலினை வாழ்த்துவது போன்ற ஓவியம் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.
-
திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாக - தமிழக முதல்வராக நம்மை வழிநடத்தவுள்ள கழக தலைவர் @mkstalin அவர்களுக்கு
— Udhay (@Udhaystalin) May 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் இணைந்து, தலைவர் அவர்களை வாழ்த்துவது போன்ற ஓவியத்தை பரிசளித்தோம். இதனை வரைந்த ஓவியர் திரு.பிரேம் டாவின்சிக்கு அன்பும், நன்றியும். pic.twitter.com/DXw3tJrWAH
">திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாக - தமிழக முதல்வராக நம்மை வழிநடத்தவுள்ள கழக தலைவர் @mkstalin அவர்களுக்கு
— Udhay (@Udhaystalin) May 7, 2021
தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் இணைந்து, தலைவர் அவர்களை வாழ்த்துவது போன்ற ஓவியத்தை பரிசளித்தோம். இதனை வரைந்த ஓவியர் திரு.பிரேம் டாவின்சிக்கு அன்பும், நன்றியும். pic.twitter.com/DXw3tJrWAHதிராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாக - தமிழக முதல்வராக நம்மை வழிநடத்தவுள்ள கழக தலைவர் @mkstalin அவர்களுக்கு
— Udhay (@Udhaystalin) May 7, 2021
தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் இணைந்து, தலைவர் அவர்களை வாழ்த்துவது போன்ற ஓவியத்தை பரிசளித்தோம். இதனை வரைந்த ஓவியர் திரு.பிரேம் டாவின்சிக்கு அன்பும், நன்றியும். pic.twitter.com/DXw3tJrWAH
மேலும் இது தனது ட்விட்டர் பக்கத்தில், "திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாக - தமிழ்நாடு முதலமைச்சராக நம்மை வழிநடத்தவுள்ள கழக தலைவர் முக ஸ்டாலினுக்கு தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் இணைந்து, தலைவர் அவர்களை வாழ்த்துவது போன்ற ஓவியத்தை பரிசளித்தோம். இதனை வரைந்த ஓவியர் திரு.பிரேம் டாவின்சிக்கு அன்பும், நன்றியும்" என பதிவிட்டுள்ளார்.