ETV Bharat / state

பஞ்சமி நிலம் விவகாரம்: உதயநிதி ஸ்டாலினிக்கு அழைப்பாணை - முரசொலி அலுவலகம் விவகாரம்

பஞ்சமி நிலம் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் குறித்து அந்நிறுவனத்துக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

udhayanidhi stalin
author img

By

Published : Nov 16, 2019, 5:43 PM IST

Updated : Nov 19, 2019, 1:58 PM IST

சென்னை: முரசொலி அலுவலக நிலம் தொடர்பாக விளக்கமளிக்க உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

திருநெல்வேலியில் தனுஷ் நடித்த அசுரன் படத்தை பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின் அப்படத்தில் பஞ்சமி நிலம் குறித்த காட்சிகள் இடம்பெற்றதைக் கண்டு படக்குழுவினரை வியந்து பாராட்டினார். இதையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி அலுவலகம் இருக்கும் இடமே பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டதுதான் என்று விமர்சித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த திமுக தலைவர் ஸ்டாலின், "முரசொலி அலுவலகம் இருக்குமிடம் பஞ்சமி நிலம் என நிரூபிக்கப்பட்டால், அரசியலை விட்டே விலகத்தயார். நிரூபிக்கத் தவறினால் ராமதாசும் அன்புமணியும் அரசியலைவிட்டு விலகுவார்களா?" எனக் கேள்வியெழுப்பி முரசொலி நிலப் பட்டாவையும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

national commissions for schedule caste
national commissions for schedule caste

இதுதொடர்பாக விசாரிக்கக் கோரி பாஜகவின் மாநில செயலாளர் ஸ்ரீநிவாசன் தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்திலும் புகாரளித்திருந்தார்.

இந்நிலையில், பஞ்சமி நில விவகாரத்தில் முரசொலி நிர்வாக இயக்குநர் உதயநிதி ஸ்டாலின், வருகின்ற 19ஆம் தேதி நேரில் விசாரணைக்கு முன்னிலையாக (ஆஜராக) தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. மேலும் நிலம் தொடர்பான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

national commissions for schedule caste
national commissions for schedule caste

நவ. 19ஆம் தேதி தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் உதயநிதியிடம் விசாரணை நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழ்நாடு அரசு குற்றவாளிக்கூண்டில் நிற்கிறது - வைகோ குற்றச்சாட்டு

Intro:Body:முரசொலி பஞ்சமி நிலம் சர்ச்சை - உதயநிதி ஸ்டாலினிக்கு சம்மன்.

பஞ்சமி நில விவகாரத்தில் முரசொலி நிர்வாக இயக்குனர் உதயநிதி ஸ்டாலின் வருகின்ற 19ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக கோரி தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் நிலம் தொடர்பான ஆவனங்களை சமர்பிக்க வேண்டும் எனவும் உத்தரவு.

முரசொலி இருக்கும் இடம் பஞ்சமி நிலம் என பாமக நிறுவனர் ராமதாஸ் சில தினங்களுக்கு முன்பு ஒரு டீவிட் மூலம் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து பிஜேபி, அதிமுக என அனைத்து கட்சிகளும் திமுக கட்சியையும், ஸ்டாலினையும் தொடர்ந்து சாடி வந்தனர். திமுக தலைவர் ஸ்டாலின் இது குறித்து விளக்கம் அளித்தாலும் சமூக வலைதளத்தில் தொடர்ந்து திமுக மீது விமர்சகர்கள் வைக்கப்பட்டது. இந்நிலையில் தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் பஞ்சமி நில விவகாரத்தில் முரசொலி நிர்வாக இயக்குனர் உதயநிதி ஸ்டாலின் வருகின்ற 19ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளது.Conclusion:
Last Updated : Nov 19, 2019, 1:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.