கரோனா தொற்றால் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைந்தார். அவர் நிவாரணம் வழங்கியதால்தான் கரோனாவால் உயிரிழந்தார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாகத் தெரிகிறது. இதனை விமர்சித்து திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
அதில், “சட்டப்பேரவையில் மறைந்த அன்பு அண்ணனின் கேள்விகளுக்குப் பதிலளிக்க வக்கற்றவர்களாக, எத்தனை முறை அவரை வெளியேற்றி, இடைநீக்கம் செய்து, அவைக் குறிப்பிலிருந்து நீக்கியிருப்பீர்கள்? ஆனால் இன்று ”நிவாரணம் வழங்கியதால் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை நாம் இழந்துள்ளோம்” என்கிறீர்கள்.
கழகத்தின் உண்மை விசுவாசியான அன்பு அண்ணனின் பெயரை நீங்கள் உச்சரிக்காதீர்கள். தவிர, வீட்டிலிருந்த அதிமுக எம்எல்ஏ பழனி, உங்கள் தனிச் செயலர் தாமோதரனுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது எப்படி? அவர்கள் என்ன ‘ஒன்றிணைவோம் வா’ திட்ட பயனாளிகளா? பதில் சொல்லுங்கள் முதலமைச்சரே” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மகனை காக்க காவலர்களின் காலில் விழும் தாய் - காவலர்கள் அராஜகம்: உதயநிதி ட்வீட்