ETV Bharat / state

நெஞ்சுக்கு நீதி படத்திற்கு யூஏ சான்றிதழ் - நடிகர் மற்றும் சேப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகவுள்ள 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படத்திற்கு யூஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

நெஞ்சுக்கு நீதி படத்திற்கு யூஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது

author img

By

Published : May 6, 2022, 12:34 PM IST

சென்னை: நடிகர் மற்றும் சேப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படத்திற்கு யூஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி சாதியத்தின் கோர முகத்தைப் பட்டவர்த்தனமாகக் கிழித்தெறிந்த படம் 'ஆர்ட்டிக்கிள் 15'. இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்கை அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தை ரோமியா பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்கிறார். போனி கபூரின் பே வியூ புரோஜக்ட் எல்எல்பி, ஜீ ஸ்டுடியோ நிறுவனங்கள் படத்தை இணைந்து வழங்குகின்றன.

நெஞ்சுக்கு நீதி' தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் காவல் துறை அலுவலராக நடித்துள்ள உதயநிதியுடன் கதாநாயகியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். இவர்களுடன் ஆரி அர்ஜுனன், ஷிவானி ராஜசேகர், மயில்சாமி, சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசு, ‘ராட்சசன்’ சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரும் 20ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு சென்சார் போர்டு யூஏ சான்றிதழ் அளித்துள்ளது.

இதையும் படிங்க:சர்வதேச பெருமையைப் பெற்ற 'ஒத்த செருப்பு சைஸ் 7'!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.