சென்னை வண்ணாரப்பேட்டை என்.என் கார்டன் பகுதியில் வினோத் என்பவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் பண்டிகை காலத்தை ஒட்டி வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், துணி எடுப்பதற்காக வந்த இரண்டு பெண்கள் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள துணிகளை திருடிக்கொண்டு தப்பிச்சென்றனர்.
இதனை கவனித்த கடை உரிமையாளர் உடனடியாக தப்பிச் சென்ற இரண்டு பெண்களையும் துரத்தியதோடு, அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் மூலமாக இருவரையும் பிடித்து வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், இவர்கள் கொருக்குப்பேட்டை பகுதியைச் சார்ந்த முருகம்மாள் மற்றும் புளியந்தோப்பு பகுதியைச் சார்ந்த அம்மு என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களிடம் இருந்த பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள துணிகளை கைப்பற்றி இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற இருவர் கைது!