ETV Bharat / state

இருசக்கர வாகன கொள்ளையன் கைது; 21 வாகனங்கள் பறிமுதல்! - crime news

சென்னையின் பிரபல இருசக்கர வாகன கொள்ளையன் கைது செய்யப்பட்டான். அவனிடமிருந்து 21 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

21 வாகனங்கள் பறிமுதல்!
21 வாகனங்கள் பறிமுதல்!
author img

By

Published : Oct 20, 2021, 8:44 PM IST

சென்னை: சென்னையின் ராஜமங்கலம் பகுதியில் தொடர்ச்சியாக இருசக்கர வாகனங்கள் திருடப்படுவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்தன. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் திருடப்பட்ட இருசக்கர வாகனத்தில் இருந்து ஒருவர், மீஞ்சூரில் இருந்து ராஜமங்கலம் பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபானக் கடைக்கு மது அருந்த வந்துள்ளார். இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், திருட்டு வாகனத்தில் வந்த நபரைக் கைது செய்தனர்.

கைதும், வாகன பறிமுதலும்...

விசாரணையில் கைது செய்யப்பட்ட நபரின் பெயர் நவநீதகிருஷ்ணன் என்பது தெரியவந்தது. திருமணமாகி 11 ஆண்டுகளாகியும் குழந்தைப்பேறு இல்லாததால், மது அருந்தி வந்துள்ளார். இதற்காக ரயில் பயணிகள் நிறுத்தும் இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடி வந்துள்ளார்.

மேலும் திருடிய வாகனங்களை வேறு ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் பதுக்கி வைத்துள்ளார். பின்னர் வாகனங்களை குறைந்த விலைக்கு விற்று, மது அருந்தி உல்லாசமாக இருந்துள்ளார்.

குறிப்பாக வில்லிவாக்கம், அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஆவடி, டேங்க் பேக்ரி, மாதவரம், மீஞ்சூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை திருடியது விசாரணயில் தெரியவந்தது. அவரிடமிருந்து இதுவரை 21 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ராஜமங்கலம் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 500 ரூபாய்... அரை மணி நேரத்தில் கரோனா நெகட்டிவ் சான்றிதழ் - மோசடி இளைஞர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.