சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் உள்ள கம்பர் தெருவைச் சேர்ந்த ராணி(52). அவர் காலை பல்லாவரம் கன்டோன்மென்ட் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு கிருஷ்ணன் தெரு வழியாக வீடு திரும்பியுள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்தில் அவரைப் பின் தொடர்ந்து வந்த 2 பேர் அவரது கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்கச் செயினை பறித்துவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
அதில், தடுமாறி கீழே விழுந்த ராணிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு முதலுதவி செய்தனர். அத்துடன் நகைப் பறிப்பு தொடர்பாக பல்லாவரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அதனடிப்படையில் காவல்துறையினர், சிசிடிவியில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணையில் ஈடுபட்டனர். அதில், வேளச்சேரியை சேர்ந்த கோகுல்(20), தேவன் (எ) தேவா (19) ஆகிய இருவரும் கொள்ளையில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர். அவர்களிடமிருந்து 4 சவரன் தங்க சங்கிலி, செல்போன்கள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: விபத்து நடந்தது போல் நாடகம்! தாய் மகனை அரிவாளால் தாக்கி நகைப்பறிப்பு!