சென்னை: தாம்பரம் கிறிஸ்தவ கல்லூரியில் இளங்கலை சமுக பணி படிக்கும் மாணவர்கள் அனகாபுத்துரை சேர்ந்த கிளமன் ஜோஷ்வா (17), அண்ணா நகர் கிழக்கு பகுதியை சேர்ந்த கயல் தாமஸ் (18) இருவரும் இருசக்கர வாகனத்தில் குரோம்பேட்டையை நோக்கி சென்றனர்.
அப்போது ஜி.எஸ்.டி சாலை சானடோரியத்தில் சாலையில் நிலைத்தடுமாரி கீழே விழுந்தனர். அப்போது பின்னால் வந்த லோடு வேன் அவர்கள் மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே மாணவர்கள் இருவரும் உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர், இளைஞர்களின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே சக கல்லூரி மணவர்கள் விபத்தில் இறந்த தகவலறிந்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: நாயால் நேர்ந்த விபத்து.. கல்லூரி மாணவன் பரிதாப மரணம்!