ETV Bharat / state

ஓசியில் பிரியாணி கேட்டு தகராறில் ஈடுபட்ட 2 காவலர்கள்; வீடியோ வைரலானதால் நடவடிக்கை!

ஓசியில் பிரியாணி கேட்டு கொடுக்காததால் மதுபோதையில் கடை உரிமையாளரிடம் இரு காவலர்கள் தகராறில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து காவலர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஓசியில் பிரியாணி கேட்டு தகராரில் ஈடுபட்ட 2 காவலர்கள்: வீடியோ வெளியாகி பரபரப்பு!

author img

By

Published : Aug 16, 2023, 2:35 PM IST

ஓசியில் பிரியாணி கேட்டு தகராரில் ஈடுபட்ட 2 காவலர்கள் பணியிட மாற்றம்

சென்னை: சுதந்திர தினத்தனமான நேற்று (ஆகஸ்ட் 15) தி நகர் பகுதியில் மது அருந்திவிட்டு பிரியாணி கடை உரிமையாளரிடம் ஓசியில் பிரியாணி கேட்டு தகராரில் ஈடுபட்ட இரு காவலர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை தி நகர், சிவ ஞானம் தெரு பகுதியை சேர்ந்தவர் காசிம் (45). இவர் அந்த பகுதியில் பல ஆண்டுகளாக பிரியாணி கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் சுதந்திர தினமான நேற்று மதியம் இவரது பிரியாணி கடைக்கு 2 காவலர்கள் வந்துள்ளனர். அவர்கள் இருவரும் ஓசியில் பிரியாணி கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு காசிம் வியாபாரம் இன்னும் தொடங்கவில்லை, பணத்தை செலுத்திவிட்டு பிரியாணி வாங்கி செல்லுமாறு கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த காவலர்கள் இருவரும் கடையின் உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பின்னர் மீண்டும் இரவு நேரத்தில் காசிம்-இன் பிரியாணி கடைக்கு வந்த அதே இரு காவலர்கள் மதுபோதையில் கடைக்கு வந்து பிரியாணி கேட்டு சாப்பிட்டு விட்டு, கடையின் உரிமையாளரிடம் இனி கடையை நடத்தமுடியாது என வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக நித்தியானந்தா ஆசிரமம் அகற்றம்.. வருவாய்த்துறை நடவடிக்கை!

மேலும் மத ரீதியாகவும் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். உணவுக்கு பணம் கொடுக்க முடியாது என பிற வாடிக்கையாளர்கள் முன்னிலையில் இரு காவலர்களும் மதுபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை வாடிக்கையாளர்கள் சிலர் வீடியோ எடுத்ததால் இரு காவலர்களும் பயந்து அவர்களது இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டு தப்பி சென்றுள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரு காவலர்களும் விட்டுச்சென்ற இருசக்கர வாகனத்தை வைத்து விசாரணை நடத்திய போது, மதுபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தி நகர் காவல் நிலையத்தில் பணியாற்றும் ஆனந்த் மற்றும் ஜெயபால் என்பது தெரியவந்தது.

சுதந்திர தினத்தன்று மதுக்கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில் இரு காவலர்களும் மதுபோதையில் ஓசியில் பிரியாணி கேட்டு உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுபோதையில் ஓசியில் பிரியாணி கேட்டு இரு காவலர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து இரு காவலர்களிடமும் துறை ரீதியான விசாரணை நடைபெற்றது.

இதனை அடுத்து காவலர்கள் ஆனந்த், ஜெயபால் ஆகியோரை ஆதம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கம் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்து பெருநகர சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டு உள்ளார்.

இதையும் படிங்க: நாங்குநேரி சம்பவத்திற்கு யார் காரணம்? இளஞ்சிறார் குற்றத்திற்கு சினிமா தான் காரணமா? குற்றவியல் துறை கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.