சென்னை பல்லாவரத்தில் உள்ள திரையரங்கம் அருகே பெண் உட்பட இரண்டு பேர் கஞ்சா விற்பனை செய்துவருவதாக, காஞ்சிபுரம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் புலனாய்வு பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் தனிப்படை காவல் துறையினர் பல்லாவரம் விரைந்தனர். அப்போது பிவிஆர் திரையரங்கம் அருகே சந்தேகப்படும்படி இருந்த பெண் உட்பட இரண்டு பேரின் கைப்பைகளை சோதனை செய்தனர்.
அதில் இருந்த 2 கிலோ கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில் அவர்கள், சென்னை வால்டாக்ஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த வினோத் என்கிற அப்பு (24), சென்னை காமராஜர் சாலையை சேர்ந்த பெண் கஜலட்சுமி (42) என்பது தெரியவந்தது.
தொடர்ந்து காவல் துறையினர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கஞ்சா விற்ற இருவர் கைது; களத்தில் இறங்கிய பொதுமக்கள்!