சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் புறவழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் அம்பத்தூரில் இருந்து வண்டலூர் நோக்கி பைபாஸ் சாலையில் இருவர் சென்று கொண்டிருந்தனர். முடிச்சூர் மேம்பாலத்தின் மேல் அதிவேகமாக வந்த வாகனம் நிலைதடுமாறி பக்கவாட்டில் இருந்த கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இருவரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் விபத்தில் ஊயிரிழந்த இருவரும் மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்த வாசு(48), ராமானுஜம்(55) என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் இருவரும் அம்பத்தூரிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணி முடிந்து வீடு திரும்பும்போது விபத்தில் உயிரிழந்தனர் என்பது தெரியவந்தது.
இதையும் படிங்க: பாம்பை வைத்து மனைவியைக் கொன்றவர் கைது!