ETV Bharat / state

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட இரண்டு நீதிபதிகள் நாளை பதவியேற்பு! - தெலுங்கானா உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட இரண்டு நீதிபதிகள் நாளை தலைமை நீதிபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொள்கின்றனர்.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட இரண்டு நீதிபதிகள் நாளை பதவியேற்பு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 22, 2023, 8:38 PM IST

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட இரண்டு நீதிபதிகள் நாளை (நவ. 23) மாலை பதவியேற்கின்றனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

அலஹாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த விவேக் குமார் சிங், தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த எம்.சுதீர் குமார் ஆகியோரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்ய கொலிஜியம் (collegium) பரிந்துரைத்து இருந்தது.

இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் இருவரையும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி அண்மையில் உத்தரவு பிறப்பித்து இருந்தார். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் நாளை (நவ. 23) மாலை 4.45 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி கங்காபூர்வாலா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

இதன் மூலம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 66ஆக உயர்ந்து காலி பணியிடங்கள் எண்ணிக்கை 9ஆக குறைகிறது. கடந்த 1968ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் பிறந்த விவேக் குமார் சிங் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அலஹாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

கடந்த 1969ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் தேதி தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் பிறந்த மம்மினேனி சுதீர் குமார் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இதையும் படிங்க: T Board-க்கு மாறும் சொகுசு வாகனங்கள் - யாருக்கு லாபம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.