இது குறித்து உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
1. சென்னை டிஜிபி அலுவலக நிர்வாகப் பிரிவு உதவி ஐஜி (ஏஐஜி) ஓம்பிரகாஷ் மீனா நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
2. நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.எஸ். செல்வ நாகரத்தினம் சென்னை டிஜிபி அலுவலக நிர்வாகப் பிரிவு உதவி ஐஜி (ஏஐஜி)-யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.