சென்னை: அனகாபுத்தூரைச் சேர்ந்தவர்கள் மாணவர் விஸ்வநாத், மோனிஷ். இவர்கள் இருவரும் நண்பர்களாக ஆரம்பக்கல்வி முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் பயின்று வந்தனர்.
இவர்களது தாய்மார்கள் இருவரும் சிறுவயது முதல் இணை பிரியா தோழிகள். அந்த வகையில் விஸ்வநாத், மோனிஷ் இருவரும் இணை பிரியா நண்பர்களாக உள்ளனர்.
இணைபிரியா நண்பர்கள்
தற்போது அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டை அரசு கொண்டுவந்துள்ளது. இதன்காரணமாக பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்த, இவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்துள்ளது.
ஒருவேளை 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்படாமல் இருந்திருந்தால், நண்பர்கள் இருவருக்கும் வெவ்வேறு கல்லூரிகளில் இடம் கிடைத்திருக்கும்.
எனவே, ஆரம்பக்கல்வி முதல் 12ஆம் வகுப்பு வரை இணைபிரியாத நண்பர்களான இவர்களை 7.5 விழுக்காடு சிறப்பு இட ஒதுக்கீடு உயர் கல்வியிலும் இணை பிரியாமல் படிப்பினைத் தொடர்வதை சாத்தியம் ஆக்கியுள்ளது.
பள்ளி காலம்தொட்டு ஒன்றாகப் பயின்று வரும் தங்களுக்கு ஒரே கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவிக்கும் நண்பர்கள், உயர் கல்வியை முடித்த பிறகு ஒரே நிறுவனத்திற்கு வேலைக்குச் சென்று விட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: ‘லஞ்ச ஒழிப்புத் துறையினர் அளித்த தகவல் தவறானது’ - கே.சி வீரமணி