சென்னை: சென்னை துறைமுகத்துக்குச் சொந்தமான ரூ. 100 கோடி நிரந்தர வைப்புத்தொகையை, போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட பின்னர், சென்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி மோசடியில் ஈடுபட்டதாக கோயம்பேடு இந்தியன் வங்கி மேலாளர் சேர்மதி ராஜா, மணிமொழி, நடராஜன் உள்ளிட்ட ஒன்பது பேர் மீது வழக்குப்பதியப்பட்டு கைதுசெய்யப்பட்டனர்.
ஸ்டூடண்ட் விசா - வெளிநாட்டவர் கைது
இந்நிலையில் சிபிஐயின் தொடர் விசாரணையில், மாணவர்களுக்கான ஸ்டூடண்ட் விசாவில் இந்தியா வந்தடைந்த வெளிநாட்டைச் சேர்ந்த இருவருக்கும் மோசடியில் பங்கிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து சென்னை ராமாபுரத்தில் தங்கியிருந்த கேமரூனைச் சேர்ந்த பெளசிமோ ஸ்டீவ் பெர்னார்ட் யானிக், காங்கோவைச் சேர்ந்த முஸ்ஸா இலுங்கா லுசியன் ஆகிய இருவரை சிபிஐ காவல் துறையினர் கைதுசெய்தனர்.
அவர்களிடம் சிபிஐ அலுவலர்கள் தொடர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை மொத்தமாக 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: போதைப்பொருள் விற்பனை - இருவர் கைது