சென்னை: பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பாலாஜி நகரைச் சேர்ந்தவர்கள் ஜெய்பிரசாந்த் (28), பாக்கியநாதன் (24). பொழிச்சலூரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (29). இவர்கள் மூன்று பேரும் பொழிச்சலூர் தாங்கல் மருத்துவமனை அருகே மது அருந்திவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
அப்போது மதுபோதையில் வந்த மற்றொரு இரண்டு பேர் கத்தியை காட்டி மூவரையும் வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஜெய்பிரசாந்த் பணம் தர முடியாது எனத் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜெய்பிரசாந்த் தலையில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர்.
பணம் கேட்டு மிரட்டல்
இதையடுத்து ரத்த வெள்ளத்தில் இருந்த ஜெய்பிரசாந்த்தை அவரது நண்பர்கள் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் இதுகுறித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் பொழிச்சலூரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (22), செல்லப்பாண்டி (22) என்பது தெரியவந்தது.
இருவர் கைது
இதையடுத்து அவர்களை (two arrested) கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கிய விஏஓ - வைரலான வீடியோ