சென்னை: அம்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ராஜசேகருக்கு பொதுமக்கள் போலி பட்டாக்கள் அரசு சான்றிதழ்களை விற்பனை செய்வதாக புகார் வந்தது. இது தொடர்பாக அம்பத்தூர் வட்டாட்சியர் ராஜசேகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் சோழபுரம் பகுதியை சேர்ந்த பினு மற்றும் ஒரகடப்பகுதியை சேர்ந்த வின்சென்ட் ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இவர்கள் இருவரும் அம்பத்தூர் பகுதியில் போலி பட்டாக்கள், பள்ளி அரசு மாற்றுச் சான்றிதழ் ஜாதி சான்றிதழ் உள்ளிட்டவற்றைப் போலியாகத் தயாரித்தது, அதேபோல அரசு முத்திரையைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு அதிக பணத்திற்காகச் சான்றிதழ்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது. பின்னர் இவர்கள் வைத்திருந்த போலி முத்திரை மற்றும் அரசு சான்றிதழ்கள் ஆகியவை காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:Yamuna Expressway: சடலங்களை கொட்டும் பகுதியாக மாறிய யமுனா விரைவுச்சாலை!