சீனாவைத் தொடர்ந்து உலக நாடுகளில் கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துவருகிறது. விமான பயணங்களால் கரோனா வைரஸ் பரவக்கூடும் என்ற பீதியால் விமானங்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகளவில் குறைந்திருக்கிறது.
இந்நிலையில், கரோனா பரவாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வெளிநாடுகளிலிருந்து வருகைதரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் நவீன கருவிகள் மூலம் தீவிர சோதனைமேற்கொள்ளப்படுகிறது.
இந்த மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னரே, வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில், இன்று அதிகாலை துபாய், கத்தார் ஆகிய நாடுகளிலிருந்து சென்னை வந்த 26 பயணிகளுக்கு கரோனா பெருந்தொற்றின் அறிகுறிகள் இருப்பதாகக் கரோனா கண்டறிதல் சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து, சிறப்பு மருத்துவக் குழுவினர் ஏழு, பெண்கள் உள்பட 26 பேரை முழுநாள் கண்காணிப்பிற்காகத் தாம்பரம் சானடோரியம் சிறப்பு முகாமிற்கு அனுப்பிவைத்தனர்.
இதையும் படிங்க: பயணிகளுக்கு இலவசமாக மாஸ்க் வழங்கிய ஆட்டோ ஓட்டுநர்