சென்னை விமான நிலையத்திற்கு இன்று வந்தடைந்த இரு விமானங்களில் 27 பேருக்கு கரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
துபாய் அபுதாபி, இலங்கை ஆகிய இடங்களிலிருந்து வந்த இரண்டு விமானங்களில் மூன்று பெண்கள் உள்பட 27 பேர் இருந்தனர்.
இவர்கள் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
சென்னை விமான நிலைய சிறப்பு மருத்துவக் குழுவினா், இவர்களை பரிசோதித்து கரோனாவின் ஆரம்பக்கட்ட அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, 24 மணி நேர கண்காணிப்பிற்காக, பூந்தமல்லி, தாம்பரம் சானடோரியம் சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, 27 பேரும் சிறப்பு வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
முன்னதாக, இன்று காலை துபாயிலிருந்து சென்னை வந்த பயணிகளில் 44 பேருக்கு கரோனா அறிகுறி கண்டறியப்பட்டது. தற்போது அவர்கள் சிறப்பு மருத்துவ முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 71 போ் சிறப்பு மருத்துவ முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டது, மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கோவையில் கரோனா வைரஸ் பரிசோதனை மையம் நாளை தொடக்கம்!