துபாயிலிருந்து ஏர் இந்தியா சிறப்பு விமானம் ஒன்று இன்று (மே. 9) சென்னை சா்வதேச விமான நிலையம் வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா். அப்போது தஞ்சாவூரைச் சோ்ந்த லியாக்கத் அலி (26) என்ற பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி சோதனையிட்டனா்.

இதையடுத்து அவருடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 451 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனா். அதன் சர்வதேச மதிப்பு ரூ. 20 லட்சம் என தெரியவந்துள்ளது. இதையடுத்து பயணி லியாக்கத் அலியை கைது செய்து மேலும் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனாவால் இறந்தவரின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள்