இந்த ஆர்ப்பாட்டம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சன்னதி வீதி அண்ணா திடலில் நடத்த திட்டமிட்டு, இதற்கு கோடக்குப்பம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை பரிசீலித்த கோடக்குப்பம் டி.எஸ்.பி. அதற்கு அனுமதி மறுத்தனர். மக்களவைத் தேர்தல் கருத்து வேறுபாடு, அரசியல் காழ்ப்புணர்ச்சி, சமூக சூழ்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டே அனுமதி மறுக்கப்பட்டதாகக் அமமுகவினர் கூறினர்.
இந்நிலையில், இந்த உத்தரவை ரத்து செய்து கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்க உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட அமமுக செயலாளர் ஆர்.பாலசுந்தரம் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து காவல்துறை விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.