இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
இலங்கையில் நுாற்றுக்கும் மேற்பட்டோரை பலி வாங்கியிருக்கும் தொடர் குண்டுவெடிப்புகளுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஈஸ்டர் திருநாளில் தேவலாயங்கள் உள்ளிட்ட இடங்களைக் குறிவைத்து அப்பாவி மக்களின் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல்கள் கோழைத்தனமானவை.
இத்தகைய பயங்கரவாத நடவடிக்கைகளை எதன் பெயராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது போன்ற காட்டுமிராண்டித்தனங்களுக்கு முடிவு கட்டியே தீர வேண்டும். குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.