அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் அறிவித்தபடி ஊரடங்கு நிவாரண நிதி, உணவுத்தொகுப்பு முழுமையாகச் சென்றடைவதைத் தமிழ்நாடு அரசு உடனடியாக உறுதிசெய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
முதற்கட்ட ஊரடங்கின்போது அறிவித்த ரூ.1000, உணவுத்தொகுப்பே இன்னும் பெரும்பாலான தொழிலாளர்களுக்குச் சென்றடையவில்லை என்று தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் இரண்டாவது கட்டமாக அதேபோன்ற உதவி வழங்கப்படுமென தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.
![ttv](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6904275_ttv.jpg)
அதிலும்கூட நலவாரியத்தில் பதிவுசெய்துள்ளவர்களில் ஏறத்தாழ பாதி பேருக்குத்தான் உணவுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கூறியிருப்பதாக வரும் செய்திகள் ஏற்புடையதல்ல. எனவே, வருமானமின்றி துயரத்தில் இருக்கும் அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் நிதியும், உணவுத்தொகுப்பும் உடனடியாகக் கிடைப்பதற்கு தமிழ்நாடு அரசு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:அமைச்சர் நிவாரணம் வழங்கிய இடத்தில் மக்களிடையே தள்ளுமுள்ளு