ETV Bharat / state

'கரோனா பாதிப்புக்கு வழங்கப்படும் மாத்திரைகளுக்கு தட்டுப்பாடா?' - கரோனா மருந்து தட்டுப்பாடு

சென்னை: கரோனா பாதிப்புக்கு வழங்கப்படும் மாத்திரைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருப்பது கவலையளிப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

TTV dinakaran ttv dinakaran statement டிடிவி தினகரன் டிடிவி தினகரன் அறிக்கை கரோனா மருந்து தட்டுப்பாடு corona medicine shortage ttv dinakaran
டிடிவி தினகரன்
author img

By

Published : Jun 19, 2020, 6:10 PM IST

இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஊரடங்கு தொடங்கியுள்ள நிலையில், கரோனா நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களுக்கு வழங்கப்படும் ஜிங்க் (ZINC), வைட்டமின் சி (VITAMIN C) உள்ளிட்ட மாத்திரைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

தமிழ்நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆரம்பத்தில் அரசு சார்பில் 10 நாட்கள் சாப்பிடுவதற்கான மருந்துப் பெட்டகம் வழங்கப்பட்டது. ஆனால், தற்போது பாதிப்பு உச்சத்திற்குச் சென்று கொண்டிருக்கும் நேரத்தில், அத்தகைய மருந்துகள் அளிக்கப்படுவது நிறுத்தப்பட்டுவிட்டதாக செய்திகள் வருகின்றன.

மேலும், கரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள் உட்கொள்ளவேண்டிய வேண்டிய வைட்டமின் சி (VITAMIN C), ஜிங்க் (ZINC) உள்ள மாத்திரைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக வரும் தகவல்கள் கவலையளிக்கின்றன.

குறிப்பாக, ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள சென்னையில் இந்த மாத்திரைகள் கிடைக்கவில்லை என்ற புகார்கள் அதிகம் எழுந்துள்ளன. இன்னும் சில இடங்களில் காலாவதியான மாத்திரைகள் அரசு சார்பில் வழங்கப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன.

பொது இடங்களில் கிருமிநாசினி மருந்து தெளிப்பதால் பலன் ஏதுமில்லை என்று உலக சுகாதார நிறுவனம் கூறிவிட்ட பிறகும், விழுந்து விழுந்து மருந்து தெளிக்கும் இந்த ஆட்சியாளர்கள், தேவையான மாத்திரைகளைப் போதுமான அளவுக்கு வாங்காமல் அலட்சியம் காட்டுவது ஏன் என்று தெரியவில்லை.

அடுத்தடுத்த நாட்களில் பாதிப்பு பெரிய அளவுக்கு இருக்கும் என நிபுணர்கள் எச்சரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக டெல்லியைப் போன்று ரயில் பெட்டிகளைத் தயார் செய்யும் பணியிலும் பழனிசாமி அரசு அக்கறை காட்டவில்லை. இது குறித்த முறையான கோரிக்கை தமிழ்நாடு அரசு சார்பில் ரயில்வே துறையிடம் வைக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோ, பேரிடரை முழுமையாக எதிர்கொள்வதற்கான செயல்திட்டமோ இல்லாமல் கண்களைக் கட்டி காட்டில் விட்டதைப் போல ஆட்சியாளர்கள் தத்தளிப்பது மக்களைப் பீதியடையச்செய்துள்ளது.

எனவே, முழு ஊரடங்கைத் தாண்டி, மேற்கொள்ள வேண்டிய பணிகளை உணர்ந்து இனியாவது பழனிசாமி அரசு செயல்படுமா" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: கரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து கவிதை வெளியிட்ட அமைச்சர் விஜய பாஸ்கர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.